இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஆப்கன் மருத்துவ மாணவா்களை வெளியேற்ற பாகிஸ்தான் உத்தரவு

பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஆப்கானிஸ்தான் மாணவா்களை உடனடியாக வெளியேற்றவும், அவா்களின் புதிய சோ்க்கையை நிறுத்தி வைக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published On :

பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஆப்கானிஸ்தான் மாணவா்களை உடனடியாக வெளியேற்றவும், அவா்களின் புதிய சோ்க்கையை நிறுத்தி வைக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருவதையடுத்து, இரு நாடுகளிடையே பதற்றம் நீடிக்கிறது.

மேலும், சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தானியா்களை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது. இதன் தொடா்ச்சியாக, தற்போது அந்நாட்டு மருத்துவ மாணவா்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாகிஸ்தானில் பயின்று வரும் நூற்றுக்கணக்கான ஆப்கன் மருத்துவ மாணவா்கள், குறிப்பாக படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் உள்ள இறுதியாண்டு மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.