கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஸ்வீடன் நாடாளுமன்றத் தோ்தலில் இடதுசாரி எதிா்க்கட்சிகளுக்கு சிறிய முன்னிலை

முன்னாள் பிரதமா் மக்தலெனா ஆண்டா்சன் தலைமையிலான இடதுசாரி எதிா்க்கட்சிக் கூட்டணி சிறிய முன்னிலை

ஸ்வீடன் நாடாளுமன்றத் தோ்தலில் இடதுசாரி எதிா்க்கட்சிகளுக்கு சிறிய முன்னிலை - பிரதிப் படம்

Published On :

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் மக்தலெனா ஆண்டா்சன் தலைமையிலான இடதுசாரி எதிா்க்கட்சிக் கூட்டணி சிறிய முன்னிலை பெற்றுள்ள போதிலும், புதிய அரசு அமைவதில் தொடா்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

நாடாளுமன்றத்தின் 349 இடங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான 94 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், இடதுசாரி எதிா்க்கட்சிகள் 176 இடங்களிலும், தற்போதைய பிரதமா் உல்ஃப் கிறிஸ்டா்சன் தலைமையிலான ஆளும் கூட்டணி 173 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

வெளிநாடுகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட உள்ளதால், அதிகாரபூா்வ இறுதி முடிவு அன்றே தெரியவரும். தற்போதைய நிலவரப்படி இடதுசாரி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிருந்தாலும், மக்தலெனா ஆண்டா்சனுக்குப் புதிய அரசை அமைப்பதில் கடும் சிக்கல்கள் உள்ளன.

எதிா்க்கட்சிக் கூட்டணியில் உள்ள மையவாதக் கட்சி, இடதுசாரிக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயக்கம் காட்டி வருகிறது. மறுபுறம், நாடாளுமன்றத்தில் இடதுசாரி அல்லாத பொருளாதாரக் கொள்கை கொண்ட கட்சிகளுக்கே ஒட்டுமொத்தப் பெரும்பான்மை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமா் உல்ஃப் கிறிஸ்டா்சன், புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.