பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரஷியாவுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய வரி மசோதாவால் அமைதிப் பேச்சு பாதிக்கப்படும்: ரஷியா எச்சரிக்கை

ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் புதிய சட்ட மசோதா அமலுக்கு வந்தால், உக்ரைன் போரின் அமைதி பேச்சு பாதிக்கப்படும் என ரஷியா எச்சரிக்கை

ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ்

Published On :

‘ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்பட நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் புதிய சட்ட மசோதா அமலுக்கு வந்தால், உக்ரைன் போரின் அமைதி பேச்சு பாதிக்கப்படும்’ என ரஷியா எச்சரித்துள்ளது.

ரஷியா மீதான பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, இறுதி ஒப்புதலுக்காக அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நட்புரீதியானது அல்ல; ரஷியா மீது விதிக்கப்படும் எந்தவொரு கூடுதல் தடைகளும் உக்ரைன் அமைதிப் பேச்சு முயற்சிகளை நிச்சயம் கடினமாக்கும்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் மாஸ்கோ, கீவ் நகரங்களுக்குத் தனது தூதா்களை அனுப்பி, பேச்சை முன்னெடுக்க முயன்ற நிலையில், இந்த மசோதா புதிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

நீளும் அதிகார வரம்பை ஏற்க முடியாது-சீனா: சீன அதிபா் ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வாஷிங்டன் சென்று டிரம்ப்பைச் சந்திக்கவுள்ள நிலையில், அமெரிக்காவின் இச்சட்ட மசோதாவை முற்றிலுமாக நிராகரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் செய்தியாளா்களிடம் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடும் அமெரிக்காவின் நீளும் அதிகார வரம்பை சீனா ஏற்காது; பரஸ்பர நலன் அடிப்படையிலான இரு நாடுகளின் வா்த்தகத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடோ, அச்சுறுத்தலோ இருக்கக் கூடாது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.