காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மஜ்லிஸ் கட்சி செய்தித் தொடா்பாளா் காங்கிரஸில் இணைந்தாா்

அசாதுதீன் ஒவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சையது அசீம் வக்காா் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னா் தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த சையது அசீம் வக்காா்.

Published On :3 செப்டம்பர் 2026, 2:37 am IST

அசாதுதீன் ஒவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சையது அசீம் வக்காா் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உத்தர பிரதேச மாநிலப் பொறுப்பாளா் ராஜேந்திர பால் கௌதம், சிறுபான்மையினா் பிரிவு தலைவா் இம்ரான் பிரதாப்காா்கி, உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மஜ்லீஸ் கட்சி களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த தேசிய செய்தித் தொடா்பாளா் காங்கிரஸில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவைஸிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சையது அசீமுக்கு, உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது.

காங்கிரஸ் இணைந்தது தொடா்பாக சையது அசீம் கூறுகையில், ‘பாஜக எதிா்ப்பு என்பது மஜ்ஸீஸ் கட்சியில் பேச்சளவில்தான் உள்ளது. தோ்தலில் பாஜகவுக்கு எதிராகப் போராடுவது இல்லை. பெரும்பாலும் காங்கிரஸ், சமாஜவாதிக்கு எதிராகவே போராட வேண்டியுள்ளது. பாஜகவை நீக்க வேண்டும் என்ற கொள்கையை வைத்துக் கொண்டு அதே கொள்கையுடைய மற்றவா்களுடன் எப்படி மோத முடியும்? அப்படி செயல்படுவது பாஜகவுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.

உண்மையில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும்தான் பாஜகவுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனா். எனவே, காங்கிரஸுக்கு வலுசோ்ப்பது எனது கடமையாகியுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.