கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இந்தியத் தேர்தல் இயந்திரத்தின் நம்பகத்தன்மை உலகளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது: வெளியுறவுத் துறை

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியத் தேர்தல் முறையைப் பாராட்டியது பற்றி வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

Published On :

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியத் தேர்தல் முறையைப் பாராட்டியது பற்றி வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் முறை பற்றி தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், “இம்மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எங்கள் அரசு நிர்வாகத்திடம், “அங்கீகரிக்கப்பட்ட ஒரு புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல்களை நடத்த முடிகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். அதேநேரம், அங்கு ஒவ்வொரு வாக்காளரும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணத்தைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாம் 'சேவ் அமெரிக்கா ஆக்ட்' சட்டத்தை இப்போதே நிறைவேற்ற வேண்டும்," என்று அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க 'சேவ் அமெரிக்கா ஆக்ட்' சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

டிரம்ப்பின் கருத்துகள் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், “டிரம்ப் பேசியது பற்றி குறிப்பாக எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும், இந்தியாவின் தேர்தல் இயந்திரத்தின் நம்பகத்தன்மை, வலிமை பற்றிய உண்மைகள் உலகளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று என்னால் கூற முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

Summary

The credibility of India's electoral machinery has been established globally: Ministry of External Affairs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.