இந்தியாவின் தேர்தல் முறையை டிரம்ப் பாராட்டியதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையரை அமெரிக்கா அழைத்துச் செல்லுமாறு காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
இந்தியத் தேர்தல் முறை பற்றி தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், “இம்மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எங்கள் அரசு நிர்வாகத்திடம், “அங்கீகரிக்கப்பட்ட ஒரு புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல்களை நடத்த முடிகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். அதேநேரம், அங்கு ஒவ்வொரு வாக்காளரும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணத்தைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாம் 'சேவ் அமெரிக்கா ஆக்ட்' சட்டத்தை இப்போதே நிறைவேற்ற வேண்டும்," என்று அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க 'சேவ் அமெரிக்கா ஆக்ட்' சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா, “அன்புள்ள டொனால்ட் டிரம்ப். தயவுசெய்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் அவரை அங்கேயே வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த விமானத்திலேயே எங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் நாங்கள் அனுப்பி வைக்கிறோம்.
நீங்கள் எங்களுக்கு இழைத்த அவமானங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நாங்கள் இந்த மிகச்சிறிய உதவியை உங்களுக்குச் செய்கிறோம் " என்று கிண்டலாகப் தெரிவித்துள்ளார்.
Summary
Following Trump's praise for India's electoral system, the Congress has quipped that the Chief Election Commissioner should be taken to the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!

அமெரிக்காவை வியக்கவைத்த இந்திய தேர்தல் முறை.. அதிபர் டிரம்ப்பின் பாராட்டுப் பதிவு!
ஓமன் மீது குண்டு வீச்சு நடத்தப்படும்: டிரம்ப் அச்சுறுத்தல்!

இந்தியாவில் வெளிப்படைத்தன்மையுடன் தோ்தல் முறை தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பெருமிதம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



