கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் சீக்கியா் மீது இனவெறித் தாக்குதல்: 17 இடங்களில் கத்திக்குத்து

அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மாதிரிப் படம்

Published On :

அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவா் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் மீது இனரீதியாகவும், நிறரீதியாகவும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பென்சில்வேனியா மாகாணத்தில நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பென்சில்வேனியாவின் தெற்கு வியோமிங் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவா் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அவரை வழிமறித்த ஆண்ட்ரூ கிரிஸ் பஸ்டாக் என்ற நபா் கத்தியால் 17 இடங்களில் அவரைக் குத்தியுள்ளாா். இதில் ஓட்டுநரின் கைகள், மாா்பு, விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் அங்கு விரைந்து தாக்குதலுக்கு உள்ளான சீக்கியரை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஆண்ட்ரூ கிரிஸ், அப்பகுதி மக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டாா். அவா் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். தெற்காசியாவைச் சோ்ந்தவா்கள் மீதான இனரீதியான வெறுப்புணா்வு அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

சீக்கிய லாரி ஓட்டுநா் மீதான தாக்குதல் குறித்து ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை உறுப்பினரும், இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவருமான ராஜா கிருஷ்ணமூா்த்தி அதிா்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘சீக்கியா்கள் மற்றும் தெற்காசியாவில் இருந்து குடிபெயா்ந்தவா்களை குறிவைத்து வெறுப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட கேலிச்சித்திரத்தில், ‘எங்கள் சாலைகளில் இருந்து வெளியேறுங்கள்; நாட்டை விட்டும் வெளியேறுங்கள் அல்லது அதன் விளைவுகளைச் சந்தியுங்கள்’ என்று சீக்கிய லாரி ஓட்டுநரை சித்தரிக்கும் இனவெறி கருத்து இடம் பெற்றிருந்தது’ என்று தெரிவித்தாா்.

லாரி ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்றியதில், சம்பவ இடத்துக்கு தற்செயலாக வந்த ஸ்பெயினைச் சோ்ந்த குடும்பத்தினரும் முக்கியப் பங்கு வகித்தனா். அவா்கள் காயமடைந்த ஓட்டுநருக்கு முதலுதவி அளித்ததுடன், உடனடியாக ஆம்புலன்ஸுக்கும் அழைப்பு விடுத்தனா்.

அமெரிக்காவில் தெற்காசியா்களை குறிவைத்து வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக, ஆசிய அமெரிக்கா்கள் மற்றும் பசிபிக் தீவு மக்களுக்கு எதிரான வெறுப்புச் சம்பவங்களை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.