யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் வழங்கும் டென்மார்க்! ஒப்பந்தம் தயார்!

கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவது குறித்து...

கிரீன்லாந்து - அமெரிக்க அதிபர் டிரம்ப் - கூகுல் மேப்ஸ் - கோப்புப் படம்

Published On :

கிரீன்லாந்து பகுதியின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க டென்மார்க் முன்வந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தீவை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது கருத்துகளுக்குப் பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த நிரந்தரக் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் தயாராகிவிட்டதாக அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை (செப். 18) அன்று அறிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆர்டிக் பகுதியில் ரஷியா மற்றும் சீனாவின் ராணுவக் கட்டமைப்புகள் நிறுவப்படுவதைத் தடுக்க முடியும் எனவும், நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் மற்றும் அதில் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதுபற்றி, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

“கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற அனைத்து தேவைகளின் மீதான கட்டுப்பாட்டை முழுவதுமாக அமெரிக்காவிடம் வழங்கும் வகையிலான ஒப்பந்தம் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் இணைந்து அமெரிக்க அரசு மேற்கொள்வதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், இதுவொரு முடிவிலா ஒப்பந்தம்; இதற்கு முடிவே இல்லை எனவும் கூறிய டிரம்ப் விரைவில் அங்கு அமெரிக்கா அதன் ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Trump has stated that Denmark has come forward to permanently hand over control of Greenland's security to the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.