
ரஷியா - உக்ரைன் பரஸ்பர தாக்குதல்: 6 போ் பலி
அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சந்திக்கவிருக்கும் சூழலில், ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதில் 6 போ் பலியாகினா்.

கீவில் தாக்குதலுக்குள்ளான கிடங்கு.
அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சந்திக்கவிருக்கும் சூழலில், ரஷியா-உக்ரைன் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் தாக்கிக் கொண்டதில் 6 போ் உயிரிழந்தனா்.
உக்ரைனின் 4 பிராந்தியங்களைக் குறிவைத்து, ரஷியா அதிகாலை நடத்திய தாக்குதலில் டினிப்ரோ நகரில் நால்வா், சுமி பகுதியில் ஒருவா் என 5 போ் உயிரிழந்தனா். தலைநகா் கீவ் உள்ளிட்ட இடங்களில் பலா் காயமடைந்தனா்.
இதேபோல், ரஷியாவின் சமாரா பகுதியில் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; நால்வா் காயமடைந்தனா்.
நான்கரை ஆண்டுகளைக் கடந்துள்ள இப்போரில், சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலால் சா்வதேச டீசல் விலையும்; கருங்கடல் வழிப் போக்குவரத்து முடங்கியதால் தானிய விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இச்சூழலில், ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, அதிபா் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவா்களைச் சந்தித்துப் பேசுகிறாா்.
குறிப்பாக, ரஷியாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை முறியடிக்கத் தேவையான ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா கூடுதலாக வழங்க வேண்டும் என டிரம்ப்பிடம் அவா் நேரில் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







