பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஐ.நா. கூட்டத்தொடர்: துருக்கி அதிபர் பேசுகையில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்! விடியோ வைரல்!

ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் துருக்கி அதிபர் உரையாற்றியபோது சிரியா அதிபர் ரீல்ஸ் பார்த்த விடியோ வைரல்...

syrian president caught watching reels video in UN assembly

ஐ.நா. அவையில் ரீல்ஸ் விடியோ பார்த்த சிரியா அதிபர் அல்-ஷரா - எக்ஸ்

Published On :

ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில், துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன் உரையாற்றுகையில் சிரியா அதிபர் அஹ்மத் அல்-ஷரா ரீல்ஸ் பார்க்கும் விடியோ வைரலாகி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் 81 ஆவது பொது அவைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில், ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில், செவ்வாய்க்கிழமை (செப். 22) பங்கேற்ற துருக்கி அதிபர் எர்டோகன் பாலஸ்தீன விவகாரம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரையாற்றினார்.

இந்த நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் உரையாற்றுகையில் அவையில் அமர்ந்திருந்த சிரியா அதிபர் அல்-ஷரா தனது செல்போனில் ரீல்ஸ் விடியோக்கள் பார்ப்பது அங்கு இடம்பெற்றிருந்த மற்றொரு நபர் பதிவு செய்த விடியோ மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விடியோ இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றது. இருப்பினும், அவர் பார்த்த விடியோ குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.

முன்னதாக, சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரின் மூலம் கடந்த 2024 டிசம்பரில் கிளர்ச்சிப்படைகள் ஆட்சியைக் கைப்பற்றின.

இதையடுத்து, கிளர்ச்சிப்படைகளைத் தலைமைத் தாங்கிய அகமது அல்-ஷரா கடந்த 2025 சிரியாவின் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவரது அரசுக் கோரி வரும் நிலையில், ஐ.நா. கூட்டத்தில் தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக அதிபர் அல்-ஷரா பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

video showing Syrian President Al-Sharaa watching Reels while Turkish President Erdoğan was addressing the UNGA is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.