விசா வழங்க மறுத்த அமெரிக்கா! ஐநா அவையில் விடியோ மூலம் பாலஸ்தீன அதிபர் உரை!
ஐ.நா. பொது அவையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விடியோ மூலம் உரையாற்றியது குறித்து...

ஐ.நா. பொது அவையில் விடியோ மூலம் உரையாற்றிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் - AP
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விடியோ பதிவின் மூலம் உரையாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடரில், ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தொடரில், காஸா மற்றும் பாலஸ்தீன விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளின் அதிபர்கள் தங்களின் உரையில் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அவரது குழுவினருக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட விடியோ மூலம் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இன்று (செப். 24) ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றியுள்ளார்.
ஐ.நா. அவையில் விடியோ மூலம் ஒளிப்பரப்பான பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் உரையில்,
“பாலஸ்தீன மக்கள் வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான காலகட்டங்களில் ஒன்றை இப்போது எதிர்கொண்டு வருகின்றனர். மேற்கு கரையில் தொடரும் இஸ்ரேலிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் காஸாவில் நடைபெறும் போரால், பாலஸ்தீன மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் இஸ்ரேல் குறிவைத்து தகர்த்துள்ளது.
இன்னும் எவ்வளவு காலம்தான் இஸ்ரேலுக்கு எதிராக சில நாடுகள் அமைதியைக் கடைபிடிப்பார்கள் அல்லது எங்கள் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை விநியோகம் செய்வார்கள்?
காஸாவிலும் மேற்கு கரையிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்புகளை உலகம் கண்டுள்ளது. பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் இன்னும் எதற்காகக் காத்திருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரண்டு நாடு தீர்வுகளை மேற்கொள்ள சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், நியூயார்க் ஐ.நா. பொது அவையில் இன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Palestinian President Mahmoud Abbas addressed the United Nations General Assembly via a video message.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






