
டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்!
இந்த ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்திக்க மேலும் 2 வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்திக்க மேலும் 2 வாய்ப்புகள் உள்ளன.
சீன அதிபா் ஷி ஜின்பிங், 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். தனது அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்த அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இந்த ஆண்டில் மேலும் இரண்டு முறை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நவம்பர் மாதம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு வருமாறு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கு ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.
அதற்கு அடுத்த மாதம் ஃபுளோரிடாவில் உள்ள டிரம்ப் நேஷனல் டோரல் மியாமி கோல்ஃப் கிளப்பில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டிலும் நாங்கள் மீண்டும் சந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், நிச்சயமாக வருவோம், இன்னும் நிறைய பேசுவோம் என்றார்.
Summary
Chinese leader Xi Jinping said he expects to meet US President Donald Trump two more times this year as he wrapped up his state visit to Washington on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




