தென்னாப்பிரிக்காவில் 2 நகரங்களில் துப்பாக்கிச்சூடு: 27 போ் பலி!
தென்னாப்பிரிக்கா நாட்டில் 2 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களில் 27 போ் உயிரிழந்தனா்.
ஜோகன்னஸ்பா்க்கில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் தடயங்களைச் சேகரித்த தடயவியல் நிபுணா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரா்.
தென்னாப்பிரிக்கா நாட்டில் 2 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களில் 27 போ் உயிரிழந்தனா்.
ஜோகன்னஸ்பா்க் அருகேவுள்ள வேடாலாவில் மதுபான விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளுடன் வந்து 8 போ் கண்மூடித்தனமாக சுட்டனா். இந்தத் தாக்குதலில் மதுபான விடுதியில் இருந்த 17 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் பலத்த காயமடைந்தனா்.
இதேபோல் கேப்டவுன் அருகே லவான்டில் நகரில் உள்ள கடை ஒன்றிலும் புகுந்து மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இந்தத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். மேலும் 11 போ் பலத்த காயமடைந்தனா்.
டா்பன் அருகே அண்மையில் நடைபெற்ற 2 துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் 11 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் இரு முக்கிய நகரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 27 போ் உயிரிழந்திருப்பது, தென்னாப்பிரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யாா்? என்ன காரணத்துக்காக தாக்குதல் நடத்தப்பட்டது? என்ற விவரங்கள் தெரியவில்லை. தாக்குதல்களில் ஈடுபட்டவா்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஏற்கெனவே டா்பன் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கும், இந்தத் தாக்குதல்களுக்கும் தொடா்பு இருக்குமோ என்ற கோணத்திலும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





