"தாயகம் கடந்த தமிழ்' - Dinamani - Tamil Daily News

"தாயகம் கடந்த தமிழ்'

First Published : 28 December 2013 01:46 AM IST


கோவை தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் "தாயகம் கடந்த தமிழ்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு கோவை என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 20,21 மற்றும் 22 தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் 11 நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து மாநாட்டு அமைப்புக் குழு வெளியிட்டுள்ள செய்தி:

மாநாட்டின் அமர்வுகள், பங்கேற்போர் குறித்த தகவல்களை மாநாட்டின் இணையதளத்தில் (www.centerfortamilculture.com) காணலாம்.

தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மாநாட்டில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் www.centerfortamilculture.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

அரசு மற்றும் அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் குழுவினராக மாலன் (இந்தியா), ரெ.கார்த்திகேசு (மலேசியா), சேரன் (கனடா), நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) ஆகியோர் செயல்படுகின்றனர்.

இருமுறை சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், சென்னை, மதுரை ஆகிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றிய நாவலாசிரியர் ப.க.பொன்னுசாமி ஆகியோர் ஆலோசகர்களாக உள்ளனர். அ.முத்துலிங்கம் (கனடா), எஸ்.பொன்னுதுரை (ஆஸ்திரேலியா), டாக்டர் சண்முக சிவா (மலேசியா), உல்ரிகே நிகோலஸ் (ஜெர்மனி), சவோ ஜியாங் (சீனா), முத்து நெடுமாறன் (மலேசியா), சீதாலட்சுமி (சிங்கப்பூர்), அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்), வெற்றிச்செல்வி (அமெரிக்கா),டாக்டர் கிருஷ்ணன் மணியன் (மலேசியா), பேராசிரியர் மணி (ஜப்பான்), திருமூர்த்தி ரங்கநாதன் (அமெரிக்கா) ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரையளித்துப் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்திலிருந்து பேராசிரியர் க.செல்லப்பன், முனைவர் பொன்னவைக்கோ, கவிஞர் புவியரசு, முனைவர் ப.மருதநாயகம், திருப்பூர் கிருஷ்ணன், இரா.மீனாட்சி, பத்ரி சேஷாத்ரி, மா.லெனின் தங்கப்பா, இந்திரன் பாரதி கிருஷ்ணகுமார், ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.