பணமதிப்பிழக்கம்: ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடந்தது என்ன?

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் நம் கையிலும், பையிலும் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
பணமதிப்பிழக்கம்: ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடந்தது என்ன?

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் நம் கையிலும், பையிலும் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

கறுப்புப் பணத்தை மீட்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கூறப்பட்ட பணமதிப்பிழப்பினால் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம்.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு சரியாக ஓராண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அன்றைய தினம் முதல் இன்று வரை நடந்தது என்ன? பிரதமர் மோடி சொன்னது நடந்ததா? அல்லது எதிர்க்கட்சிகள் சொன்னது போல் பணமதிப்பிழக்கம் ஒரு முட்டாள்தனமான முடிவுதானா?

மத்திய அரசு சொல்வது என்னவென்றால், பணமதிப்பிழக்கத்துக்குப் பிறகு தாமாக முன் வந்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வங்கிகளின் பண இருப்பு அதிகரித்துள்ளது என்பதே.

வங்கிகளுக்கு அதிகப்படியான பண இருப்பு வருவதற்கு இதை விட மிகச் சிறந்த நேரம் என்பது இல்லவே இல். அதாவது பணமதிப்பிழக்கத்துக்குப் பிறகு ரூ.1.35 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் வங்கிக்குத் திரும்பியது. 

அதே சமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகப்படியான வரி வசூல் நடந்திருப்பதும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. அதாவது 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரையில் கிடைத்திருக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் 2016-17ம் நிதியாண்டில் 1.26 கோடி ரிடர்ன் பதிவு செய்வோர் மற்றும் பதிவு செய்யாதவர்கள் என புதிய வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கடந்த 2016 - 2017ம் நிதியாண்டில் கணினி மற்றும் நேரடியாக என வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 5.43 கோடியாகும். இது 2015-16ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை விட இது 17.3% அதிகம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசின் வருவாயைப் பெருக்கும்!
பணமதிப்பிழப்பு: காஷ்மீரில் வன்முறை, ஹவாலா நடவடிக்கைக் குறைந்தது

2017ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதியோடு முடிவடைந்த காலத்துக்குள், தனிநபர்கள் பதிவு செய்த இ-ரிடர்ன்ஸ், 2.79 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2.22 கோடியாக இருந்தது. அதாவது இ-ரிடர்ன்ஸ் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 25.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
 

வருமான வரித்துறையினர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் பார்த்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் "தாமாக முன் வந்து வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அளித்த மற்றொரு தகவலில், ஆகஸ்ட் மாதம் வரையிலான புள்ளி விவரப்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை 158 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு 447 சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டில் 1,152 ஆக உயர்ந்தது. அதே போல பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அளவும் கடந்த ஆண்டு ரூ.712 கோடியாக இருந்தது, இந்த ஆண்டு ரூ.1,469 கோடியாக உயர்ந்தது. வருமானத்துக்கு பொருந்தாத சொத்துக்கள் கைப்பற்றப்பட்ட அளவும் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ரூ.11,226 கோடியில் இருந்து ரூ.15,496 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவு: பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமல்ல
பணமதிப்பிழப்பால் அரசுக்கு வரி வருவாய் குறைவு : வித்யாசாகர் ராவ்​

வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பணமதிப்பிழக்கம் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்தையும், வருமானத்தையும் ஒப்பிட்டு நடவடிக்கை எடுக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்கு 'பிராஜெக்ட் இன்சைட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு மற்றும் பிறகான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததில் பெரிய மாறுபாடுகள் இருக்கும் சுமார் 25,572 கணக்குகளை தேர்வு செய்து, அவற்றை தீவிரமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் கணக்குகள் 'அதிக ஆபத்தானவை' என்ற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், கறுப்புப் பணத்தை மீட்போம் என்ற கோஷத்தோடு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், மத்திய அரசு நினைத்த அளவுக்கு சாதிக்க் முடியவில்லை என்பதே அவர்கள் ஒப்புக் கொள்ளாத உண்மை.

ஒரே ஒரு போலி நிறுவனம் பெயரில் 2,134 வங்கிக் கணக்குகள்: தலையை விட்டுவிட்டு வாலைப் பிடித்ததோ!

பல போலிக் கணக்குகளில் கறுப்புப் பணம் போடப்பட்டு வெள்ளையாக மாற்றி பணத்தை துடைத்து எடுத்து விட்டபிறகே, அவர் போலி நிறுவனங்களின் பெயரில் துவங்கப்பட்ட கணக்குகள் என்பதை மத்திய அரசு கண்டுபிடித்து அறிவித்தது. அதனால் நடக்கப் போகும் நன்மை என்னவென்று தெரியவில்லை.
கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றக் கொண்டு வந்ததா பணமதிப்பிழப்பு? சிதம்பரம் காட்டம்
சுதந்தர தினம்: மோடி உரையில் பணமதிப்பிழப்பு குறித்த விளக்கம் இடம்பெற்றதா? 

ஓராண்டுகளைக் கடந்துவிட்டாலும் எதிர்க்கட்சிகளின் தொடர் விமரிசனத்துக்குள்ளாகும் விஷயமாகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளது. இதற்கு சரியான பதிலைக் கொடுக்கவும் மத்திய அரசு இன்னமும் தயாராகவில்லை.

தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் பல துயரங்களோடு, இந்த பணமதிப்பிழக்கம் நடவடிக்கையால் ஏற்பட்ட இன்னல்களையும் தாங்கிக் கொண்டு ஏதேனும் ஒரு நல்லது நடந்துவிடாதா என்று ஏங்கிய ஏழைகளுக்குக் கிடைத்தது என்ன? என்ற கேள்விக்கு பதில் கிடைக்க இன்னும் சில காலம் ஆகுமோ..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com