விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி...

நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம் என்று

News image
Updated On :8 செப்டம்பர் 2016, 7:05 am

DIN

திருச்சி: நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்த முறையைக் கண்டறிந்துள்ள மூத்த விவசாயி ஸ்ரீதர் கூறியது:
100 மில்லி வேப்பெண்ணெய், ஒரு லிட்டர் கோமியம், 10 வில்லை கற்பூரம் ஆகியவைதான் மூலப்பொருள்கள். வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும். கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால்  கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம்.
நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கத்திரி பயிரில் தண்டு துளைப்பான், காய்துளைப்பான் ஆகியவற்றையும், மல்பரி, பப்பாளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதாகும்.
நெற்பயிரில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் பூச்சி ஆகியவற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.
பருத்திப் பயிரில் அனைத்துவகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது இந்த இயற்கை பூச்சி,
வெங்காயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நுனிகருகல் நோய்க்கு ஒரு தடவை இயற்கை பூச்சி விரட்டியைப் பயன்படுத்தினால், அறுவடை வரை நோய் பாதிப்பு இருக்காது. வெண்டை மற்றும் உளுந்து பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இயற்கை பூச்சிவிரட்டிக்கு உள்ளது.
வேர்க்கடலை பயிரில் தொடக்கம் முதலே தெளிக்கும்போது பூச்சிகள் தாக்குதலே இருக்காது. எலுமிச்சை மரங்களில் அனைத்து பூச்சிகளும் கட்டுப்படுவதுடன் அளவுக்கு அதிகமாக பூக்கள் வருடம் முழுவதும் தொடர்ந்து காய்க்கும்
அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது என்றார் அவர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.