பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுரங்கங்களை தேசியமயமாக்கினால் சட்டவிரோத செயல்களை தடுக்கலாம்

பெங்களூர், ஜன. 8: சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுத்து நிறுத்த சுரங்கங்களை தேசியமயமாக்குவதே சிறந்த தீர்வாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினரும், எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெங்களூர், ஜன. 8: சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுத்து நிறுத்த சுரங்கங்களை தேசியமயமாக்குவதே சிறந்த தீர்வாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினரும், எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

 அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை இந்திய ஜனநாயக கட்டமைப்பில் ஊழலை எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருத்தரங்கு நடைபெற்றது.

 இக்கருத்தரங்கை தொடக்கிவைத்து பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், சட்டவிரோத சுரங்கத்தொழில் பெருகியுள்ளது கவலையளிக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நாட்டில் இருக்கும் எல்லா சுரங்கங்களையும் தேசியமயமாக்க வேண்டும். உலகில் கனிமவளங்கள் முழுமையாக தீர்ந்துபோகும்போது பயன்படுத்தி கொள்வதற்காக, அமெரிக்கா மற்றும் சீனா தங்கள் நாட்டு கனிமவளங்களை இன்னும் பயன்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் கனிமவளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதற்கு மூக்கணாங்கயிறு போட தவறினால், எதிர்கால இந்தியா ஆபத்தான காலகட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.

சுரங்கங்களால் இயற்கை வனங்கள் நாசமடைந்து வருகின்றன.

இதுதவிர, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு சுரங்கங்களை தேசியமயமாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பிடுவதற்காகதான் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்து கட்சிகளும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.