கோபுரத்திலிருந்து கீழே விழுந்து மின் வாரிய ஊழியர் சாவு
பணியின் போது கால் தவறி கீழே விழுந்து மின் வாரிய ஊழியர் உயிரிழந்தார்.
ராம்நகர் மாவட்டம், பரவதாபுராவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (25). இவர் பெங்களூரு ஊரகம் நெலமங்களாவில் மின் வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை ஹரேபொம்மனஹள்ளி ஏரி அருகே உள்ள உயரழுத்த மின் கோபுரத்தில் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த நாராயணசாமி நிகழ்விடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார், நாராயணசாமியில் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து நெலமங்களா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
