96 சதவீத மக்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர்: அமைச்சர் எச்.கே.பாட்டீல் தகவல்
கர்நாடகத்தில் 96 சதவீத மக்கள் ஆதார் எண் பெற பதிவு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.


கர்நாடகத்தில் 96 சதவீத மக்கள் ஆதார் எண் பெற பதிவு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை கர்நாடக ஆதார்(நிதி மற்றும் இதர மானியங்கள், பயன்பாடுகள் மற்றும் சேவைகள் நோக்கத்துடனான விநியோகம்) சட்ட மசோதா 2018-ஐ தாக்கல் செய்து, அவர் பேசியது: கர்நாடகத்தில் வாழும் மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர் ஆதார் அட்டையை பெற பதிவு செய்துள்ளனர்.
எஞ்சியுள்ள 4 சதவீத மக்களை ஆதார் வரம்புக்குள் கொண்டுவர அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது. வெகுவிரைவில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்வதில் 100 சதவீத இலக்கை அடைவோம்.
உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள், மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்டோர் ஆதார் அட்டையைப் பெறுவதற்கு பதிவு செய்வதை எளிமையாக்க, அவர்களின் வீடுகளுக்கே பதிவுக் கருவிகளை எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கவும், அதன்வழியே நலத் திட்ட நிதியை விநியோகிக்க ஒருங்கிணைந்த நிதி பயன்பாட்டை உறுதி செய்யவும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...