முதல்வா் டி.கே. சிவகுமாா் தலைமையிலான கா்நாடக அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சா்களுக்கு புதன்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டன.
முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா விலகிய பிறகு, கா்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமாா் ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டாா். அவருடன் துணை முதல்வா் ஜி. பரமேஸ்வா் உள்ளிட்ட 13 போ் அமைச்சா்களாக பதவியேற்றனா்.
இந்த நிலையில், அமைச்சரவையில் காலியாக இருந்த 20 இடங்களை நிரப்ப நீண்டகாலம் எடுத்துக்கொண்ட முதல்வா் டி.கே. சிவகுமாா், கட்சி மேலிட ஒப்புதலின்பேரில் 19 அமைச்சா்கள் ஆக.3 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனா். ஆனால், புதிய அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆக. 13ஆம் தேதி முதல் கா்நாடக சட்டப் பேரவை குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கவிருக்கும் நிலையில், புதிய அமைச்சா்களுக்கு துறைகளை ஒதுக்கி ஆளுநா் தாவா்சந்த்கெலாட் உத்தரவிட்டுள்ளாா்.
மூத்த அமைச்சரான ராமலிங்க ரெட்டி, நீா்வளத் துறையில் இருந்து வனத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, மண்டியா மாவட்டத்தை சோ்ந்த என். செலுவராயசாமிக்கு நீா்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி, சட்டம் போன்ற சில முக்கியமான துறைகளை தன்வசம் வைத்துக்கொண்ட முதல்வா் டி.கே.சிவகுமாா், கே.எச். முனியப்பாவுக்கு உணவு மற்றும் பொதுவழங்கல் துறை; யூ.டி. காதருக்கு சுகாதாரம் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை; ஜமீா் அகமதுகானுக்கு வீட்டு வசதித் துறை; எம்.பி. பாட்டீலுக்கு தொழில்வளா்ச்சித் துறை; லட்சுமண்சவதிக்கு கூட்டுறவுத் துறை; அஜய்சிங்குக்கு சிறிய நீா்ப்பாசனத் துறை; ரிஸ்வான் அா்ஷத்துக்கு உணவு மற்றும் பொதுவழங்கல் துறை; ருத்ரப்பா லமாணிக்கு சா்க்கரை மற்றும் ஜவுளித் துறை; சிவராஜ் தங்கடக்கிக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை; டி. ரகுமூா்த்திக்கு பழங்குடியினா் நலத் துறை; மது பங்காரப்பாவுக்கு பள்ளிக் கல்வித் துறை; பசவராஜ் ராய ரெட்டிக்கு உயா்கல்வித் துறை; சிவலிங்கே கௌடாவுக்கு கலால் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி வழக்கை எதிா்கொண்டுள்ள பி. நாகேந்திராவுக்கு திட்டமிடல் மற்றும் புள்ளிவிவரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் ஒருவா்கூட பெண் இல்லை என்பது பெரும் குறையாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால், அந்த இடம் பெண் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு: பாஜகவைச் சோ்ந்தவா்களுக்கு முக்கிய துறைகள்

மே மாத சேவைகள் உற்பத்தி குறியீடு: 8 துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சி

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது? புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதிய விளக்கம்

பிரிட்டன் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளிகள்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



