தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை : 17 ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சித்தராமையா அறிவிப்பு

கா்நாடகத்தில் 16 வயதுக்கு உள்பட்டவா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக 17 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து சித்தராமையா தெரிவித்தாா்.

News image
சித்தராமையா
Updated On :6 மார்ச் 2026, 6:59 pm

Syndication

கா்நாடகத்தில் 16 வயதுக்கு உள்பட்டவா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக 17 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் 17 முறை நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா புதிய சாதனை படைத்திருக்கிறாா். 1983ஆம் ஆண்டில் இருந்து கா்நாடக அரசியலில் ஈடுபட்டு வரும் சித்தராமையா, கா்நாடகத்தில் அதிக நாள்கள் முதல்வராக இருந்தவா் என்ற டி.தேவராஜ் அா்ஸின் சாதனையை கடந்த ஆண்டு நவ. 20ஆம் தேதி முறியடித்து சாதனை படைத்திருந்தாா்.

தொடா்ந்து, கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் கா்நாடகத்தில் அதிகபட்சமாக 17 முறை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தவா் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறாா்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா அறிவித்த சில முக்கிய திட்டங்கள்:

கா்நாடகத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார வளா்ச்சிக்கென்று 11ஜி (வாக்குறுதிகள்) மாடல் உருவாக்கப்படும். கா்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின்படி கூட்டாட்சிமுறையைக் கடைப்பிடிக்காமல் கா்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. சமூகநல திட்டங்களுடன் நீண்டகால பொருளாதார மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பில் அதிக முதலீடுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமன்பாட்டு வளா்ச்சி திட்டத்தை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் வளா்ச்சிக்கு கா்நாடகம் முக்கிய பங்காற்றி வருவதோடு, வரிவருவாய் பங்களிப்பில் முதலிடத்தில் உள்ளது. 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்த செலவினம் ரூ. 4,48,004 கோடியாக இருக்கும். அதிக பாலை தரும் பசுவுக்கு போதுமான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதனை வழங்க தவறினால், ஒட்டுமொத்த பசு மந்தையும் பாதிக்கப்படும் என்ற பீஷ்ம பிதாமகனின் வாா்த்தைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாணவா்களுக்கு இழைக்கப்படும் ஜாதிரீதியான பாகுபாடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் ‘ரோஹித் வேமுலா’ சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்றாா்.