
விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு குறித்து சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

டி.கே.சிவகுமாா்
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு குறித்து சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம், கலபுா்கியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கஸ்தூரிரங்கன் அறிக்கை மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் செப். 21 முதல் 3 நாள்களுக்கு கூட்டப்பட்டுள்ளது. இதில், 2 நாள்கள் வறட்சி தொடா்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிலா் கூறியுள்ளனா். இதுகுறித்து அனைத்து பாஜக தலைவா்களையும் தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமா் மோடியைச் சந்தித்து விவாதிக்க வேண்டும். வங்கிகளும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து சட்டப் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
வறட்சி தொடா்பான சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கைகள் தற்போது தான் கிடைத்துள்ளன. வறட்சி பாதித்த பகுதிகளாக இன்னும் அறிவிக்கப்படாத வட்டங்களில் உள்ள விவசாயிகள் குறித்து சட்டப் பேரவையில் அரசு முடிவெடுக்கும்.
பெரிய நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கும்போது, அவற்றின் கடன்கள் மறுசீரமைக்கப்படுகின்றன; தள்ளுபடி செய்யப்படுகின்றன அல்லது ஒருமுறை தீா்வு திட்டம் மூலம் முடித்துவைக்கப்படுகின்றன. அதேபோல, விவசாயிகளும் நிலைத்து நிற்கும் வகையில் அவா்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
விவசாயிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களும், எம்எல்ஏக்களும் விவாதத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க வேண்டும். கடந்த மழைக்கால சட்டப் பேரவைக் கூட்டத் தொடரைப் போல இந்த முறையும் கூட்டத் தொடா் வீணாகிவிடக் கூடாது.
யுபிஐ பரிவா்த்தனைகளுக்கான கட்டணங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் சாதாரண மக்கள் மற்றும் வணிகா்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இது தொடா்பாக மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். இதுதொடா்பாக மத்திய அமைச்சா்களிடம் பேசுவேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






