கர்நாடகத்தில் அடுத்த ஆண்டுகளுக்கு மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிவகிக்கும் என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு, ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் 100 நாள்களை நிறைவு செய்கிறது.
கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் 100 நாள்கள் ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்துள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்கும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய முதல்வர் சித்தராமையா செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்துள்ளது. மேலும் 3 மாதகால ஆட்சியில் பல புதிய திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது.
விவசாயிகள் தனியார் அமைப்புகள், தனிநபர்களிடம் இருந்துபெறப்பட்ட கடன் தவிர, தேசிய வங்கி, கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள ரூ.31 ஆயிரம் கோடிமதிப்பிலான பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் 13 மாவட்டங்கள் கடுமையான வறட்சியால் அவதிப்படும் நிலையில், குடகு , சிக்மகளூரு, தென்கன்னட மாவட்டங்கள் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அவதியுற்ற மக்களுக்குத் தேவையான உதவிகளை கர்நாடக அரசு உடனடியாக வழங்கியுள்ளது.
குடகு மாவட்டத்துக்கு வெள்ளநிவாரண உதவிகளை வழங்காமல் மத்திய அரசு அலட்சியப்படுத்தியுள்ளது. கேரளத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, குடகு மாவட்டத்தில் வெள்ளபாதிப்புகளை பார்வையிட தவறிவிட்டார். முதல்வர் குமாரசாமி, வியாழக்கிழமை புதுதில்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து நிதியுதவி கேட்கவிருக்கிறார். வெள்ளநிவாரணநிதியாக ரூ.2 ஆயிரம் கோடி அளிக்குமாறுமத்திய அரசுக்கு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
பெங்களூருவில் சட்டவிரோதமாக பதித்திருந்த 8கிமீ நீளத்திற்கான கேபிளை அகற்றியுள்ளோம். பெங்களூருவில் ரூ.13,500கோடியில் வெளிவட்டசாலை அமைக்கப்படும். அதற்கான பணிகள் வெகுவிரைவில் தொடங்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ. 60 கோடி நில மோசடி: துணை ஆட்சியர் சஸ்பெண்ட்

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13) - இன்று நல்ல நாள்!

இன்றைய ராசி பலன்கள் (13.08.2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிகத்துக்கு வெற்றி!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


