எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விருப்பப் பதிவு தொடக்கம்

மருத்துவ மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:00 am

DIN

மருத்துவ மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 2018-19-ஆம் ஆண்டில் மருத்துவம்,  பல் மருத்துவம் போன்ற மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் தெரிவு செய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியல் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். 
சேர்க்கை இடங்களின் கையிருப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 48 மருத்துவக் கல்லூரிகளில் 3,390 அரசு  இடங்கள்,  1,808 தனியார் இடங்கள்,  551 வெளிநாடுவாழ் இடங்கள்,  171 பிற இடங்கள் ஆக மொத்தம் 5,920 இடங்கள் உள்ளன. அதேபோல, மொத்தமுள்ள 38 பல் மருத்துவக் கல்லூரிகளில்  928 அரசு இடங்கள், 1,310 தனியார் இடங்கள், 386 வெளிநாடுவாழ் இடங்கள், 130 பிற இடங்கள் ஆகமொத்தம் 2,754 இடங்கள் உள்ளன .
இதற்காக ஜூலை 10-ஆம் தேதி மாலை 5 மணி வரைவிருப்பப் பாடங்கள்,  விருப்பக்கல்லூரிகளை ‌w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். 
இதனடிப்படையில், முதல்சுற்றுக்கான இறுதி சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.