பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (பி.எம்.டி.சி.) சார்பில் ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி, பியூ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைக் கட்டணப் பேருந்து அட்டையைப் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி, ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி, பியூ கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சலுகைக் கட்டணப் பேருந்து அட்டையை வழங்கி வருகிறது.
அச்சிடப்பட்ட பேருந்து அட்டையைப் பெற மாணவர்கள் கழகத்தின் அலுவலகங்களுக்கு அடிக்கடி வந்துபோக நேரிடும். மேலும் 4-5 சான்றிதழ்கள், ஆவணங்களை அளிக்க வேண்டியிருக்கும். பேருந்து அட்டைகளை வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்க முடிவு செய்துள்ள போக்குவரத்துக் கழகம், தற்போது மாணவர்களின் வீட்டுவாசலுக்கே அவற்றை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
தானியங்கி வழியே பேருந்து அட்டைகளை மாணவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பேருந்து அட்டைபெற இணையதளம் அல்லது ஊடாடும் குரல் பதில்மொழி (ஐ.வி.ஆர்.) மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆரம்ப, உயர்நிலை, பியூ கல்லூரி மாணவர்கள், பள்ளிகள், பியூ கல்லூரிகள் இணையதளம் அல்லது ஐவிஆர் முறையில் விண்ணப்பிக்கலாம். ஆனால் கல்லூரி மாணவர்கள் இணையதளம் அல்லது ஐ.வி.ஆர். முறையில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 161 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். இதுதவிர, www.mybmtc.com இணையதளத்திலும் பதிவிடலாம்.
மின்-விண்ணப்பங்கள் வழியே விண்ணப்பங்களைச் செலுத்தியிருந்த மாணவர்களின் முகவரிக்குப் பேருந்து அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் அனுப்பி வைக்கப்படும். அஞ்சலரிடம் பேருந்துக்கான சலுகைக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு, ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொண்டு, அதைப் பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஒப்புகைச் சீட்டுடன் பயணிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.mybmtc.com என்ற இணையதளத்தைக் காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!

கோவைப் புதூா் பகுதியில் முள்புதரில் கிடந்த இளம்பெண் சடலம்! காரணம் என்ன?
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கூகுள் பிக்சல் 11 ப்ரோ? சிறப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


