எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்க மாட்டோம் எனத் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திப்பு சுல்தான் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. அதை ஒரு சிலர் எதிர்த்து வருகின்றனர்.
போராட்டம் என்பது ஜனநாயகத்தின் கடமையாகும். என்றாலும், பிறந்த நாள் விழாவின்போது அமைதியைக் குலைக்கும் வகையில், யாரேனும் முயன்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் லாபத்துக்காக திப்பு பிறந்த நாளை பாஜகவினர் எதிர்த்து வருவதாக, உளவுத் துறையின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
எனவே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க யார் முயன்றாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசியலாக்க பாஜக முயன்றால், அதற்கு காங்கிரஸ், மஜத கட்சியினர் உரிய பதிலைக் கொடுப்பார்கள். தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது நமது மரபு என்றாலும், வட கர்நாடகத்தில் 100 வட்டங்களில் வறட்சி நிலவி வருவதால், மாநிலத்தில் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







