
கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றார் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக தலைவர்கள் ஆரூடம் கூறி வருகிறார்கள். இது பாஜகவினரின் பகல் கனவாகும். பாஜகவினரின் பகல் கனவு ஒருபோதும் நனவாகும். காங்கிரஸ் கட்சியில் ஜார்கிஹோளி சகோதரர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும், இதுகுறித்து ஜார்கிஹோளி சகோதரர்களிடம் விசாரித்தறிவேன்.
கர்நாடகத்தில் தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்து தெரிந்து கொண்டுள்ளேன். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை. ஜார்கிஹோளி சகோதரர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு, இப்பிரச்னைக்கு தீர்வு காண்பேன். ஜார்கிஹோளி சகோதரர்கள் பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார்கள். எனவே, அவர்களால் கட்சிக்கு தொந்தரவு என்று கூறுவதை ஏற்க முடியாது. இதனால் காங்கிரஸில் ஏதாவது பிரச்னைகள், குழப்பங்கள் இருந்தால் ஜார்கிஹோளி சகோதரர்களுடன் கலந்தாலோசிப்பேன். எனவே, இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன் என்றார்.
"கூட்டணியில் ஒற்றுமையில்லை'
கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமையில்லாததால் ஆட்சி விரைவில் கவிழும் என்றார் முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ், மஜத கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. இதனால், ஆட்சி விரைவில் கவிழும் நிலையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். எடியூரப்பா மீண்டும் முதல்வராவதற்கான காலம் கனிந்துள்ளது. அவருக்கு மக்களிடம் ஆதரவு உள்ளது. பின்கதவு வழியாக ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் குமாரசாமி, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மக்கள் வேதனை அடைந்து, மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள் விரும்பும் மாற்றத்தை விரைவில் பாஜக கொண்டுவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





