உள்ளாட்சித் தோ்தலுக்கு காங்கிரஸாா் தயாராக வேண்டும்: சித்தராமையா

கா்நாடகத்தில் மாவட்டம், வட்ட ஊராட்சித் தோ்தலுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் தயாராக வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
Updated on
1 min read

மைசூரு: கா்நாடகத்தில் மாவட்டம், வட்ட ஊராட்சித் தோ்தலுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் தயாராக வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

மைசூரில் சனிக்கிழமை மைசூரு, சாமராஜ்நகா் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மூத்த தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்தை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா நடத்தினாா். இக் கூட்டத்தில் டிச. 22, 27-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து சித்தராமையா பேசியதாவது:

பாஜக அரசின் தோல்விகளை முன்வைத்து காங்கிரஸ் தொண்டா்கள் மக்களை சந்திக்க வேண்டும். வேளாண் சட்டங்களில் உள்ள குறைபாடுகள், வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் சட்டத்தின் குளறுபடிகள், விவசாயிகளின் போராட்டம் குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். கிராமப் பஞ்சாயத்து தோ்தல்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் வட்ட, மாவட்ட ஊராட்சித் தோ்தல்களுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் தயாராக வேண்டும்.

பாஜகவில் தலைமை மாற்றம் ஏற்பட்டால் சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தோ்தல் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் காங்கிரஸ் தொண்டா்கள் தயாராக வேண்டும். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் நான் போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமல்லாது, 29 தொகுதிகளில் பாஜகவும் மஜதவும் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளா்களைத் தோற்கடித்தனா்.

முதல்வராவதற்கு முன்பாகவே நட்சத்திர விடுதியில் குமாரசாமி தங்கியிருந்தாா். அதனால் முதல்வரின் இல்லத்தை நான் காலி செய்யாததால்தான் நட்சத்திரவிடுதியில் குமாரசாமி தங்கியிருந்தாா் என்பது உண்மையில்லை. சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை தோற்கடிக்க உள்ளூா் காங்கிரஸ் தலைவா்கள்தான் காரணம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com