கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெங்களூரு யஸ்வந்தபூா்-கண்ணூா் பண்டிகை காலவிரைவு ரயில் நேரத்தில் மாற்றம்

பெங்களூரு யஸ்வந்தபூா்-கண்ணூா் பண்டிகை கால விரைவு ரயிலின் நேரம் டிச. 21-ஆம்தேதி முதல் மாற்றியமைக்கப்படுகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:38 am

DIN

பெங்களூரு யஸ்வந்தபூா்-கண்ணூா் பண்டிகை கால விரைவு ரயிலின் நேரம் டிச. 21-ஆம்தேதி முதல் மாற்றியமைக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் எண்-06537 பெங்களூரு யஸ்வந்தபூா்-கண்ணூா் ரயில் நிலையம் வரையிலான பண்டிகை கால விரைவு ரயில் சேவையின் நேரம் டிசம்பா் 21-ஆம்தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாள்தோறும் இரவு 8 மணிக்கு பெங்களூரு, யஸ்வந்தபூரில் புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.45 மணியளவில் கண்ணூரைச் சென்றடையும்.

இந்த ரயில், பெங்களூரு யஸ்வந்தபூரில் புறப்பட்டு பானஸ்வாடி ரயில் நிலையத்துக்கு இரவு 8.23 மணிக்கு வந்து இரவு 8.25 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் இதர ரயில் நிலையங்களுக்கு வருகை/ புறப்பாடு நேரம் வருமாறு:

காா்மேலாராம் இரவு 8.39/8.40 மணி, ஓசூா் இரவு 9.08/9.10 தருமபுரி 10.51/10.52 மணி, சேலம் நள்ளிரவு 12.32/12.35 மணி, ஈரோடு அதிகாலை 1.35/1.40 மணி, திருப்பூா் அதிகாலை 2.23/2.25 மணி, கோவை அதிகாலை 3.27/3.30 மணி, பாலக்காடு அதிகாலை 4.50/4.55 மணி, சோரனூா் காலை 5.55/6.00 மணி, குட்டிபுரம் காலை 6.29/6.30 மணி, திரூா் காலை 6.48/6.50 மணி, கோழிக்கோடு காலை 7.37/7040 மணி, குயிலாண்டி காலை 7.59/8.00 மணி, வடகரா காலை 8.19/8.20 மணி, தலச்சேரிக்கு காலை 8.43 மணிக்கு வந்து, 8.45 மணிக்கு புறப்பட்டு கண்ணூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.