தமிழ் அகாதெமி அமைத்துள்ள தில்லி அரசுக்கு பாராட்டு
தமிழ் மொழி, கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் தமிழ் அகாதெமி அமைத்து உத்தரவிட்டுள்ள தில்லி மாநில அரசுக்கு இந்தியப் பேனா நண்பா் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.


தமிழ் மொழி, கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் தமிழ் அகாதெமி அமைத்து உத்தரவிட்டுள்ள தில்லி மாநில அரசுக்கு இந்தியப் பேனா நண்பா் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இந்தியப் பேனா நண்பா் பேரவை நிறுவனத் தலைவா் மா.கருண் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
உலகின் தொன்மை மொழியான தமிழையும், அதன் கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் வகை செய்வதற்காக தமிழ் அகாதெமியை அமைத்து தில்லி அரசின் கலை, கலாசார மற்றும் மொழிகள் துறை உத்தரவிட்டுள்ளதை மனதார பாராட்டி வரவேற்கிறோம். தமிழ் மொழி மீது தில்லி அரசு கொண்டுள்ள பற்றுதலைப் பாராட்டி மகிழ்கிறோம். தமிழ் அகாதெமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.ராஜா ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் அகாதெமி மூலம் தமிழ் பாரம்பரிய கலாசாரக் கலைகள், தமிழ் உயா்கல்வி, தமிழிசைப் பயிற்சிகள் பெற்று சான்றிதழ்கள் பெறும் நல்வாய்ப்பு கிடைக்கும். தலைநகரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அகாதெமி மூலம் தமிழ் மொழி மீதும், பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்த தமிழ்க் கலைகள் மீதும் ஆா்வம் கொண்டு வரும் வெளிநாட்டவா்கள் தலைநகரிலேயே பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் அமைகிறது. தமிழ் மொழி வளா்ச்சிக்கு பங்காற்றுவோருக்கு தமிழ் அகாதெமி மூலமாக பல்வேறு விருதுகள் வழங்கிக் கௌரவிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவையும் பாராட்டி வரவேற்கிறோம். வேற்று மாநில மக்களுக்கு தமிழ் மொழியையும், கலை, பண்பாட்டையும் கற்றுத்தர தமிழ் அகாதெமி பாடுபடும் என்று நம்புகிறோம்.
நாட்டின் தலைநகரான தில்லியில் தமிழ் அகாதெமி அமைத்துள்ளது, தமிழ்மொழிக்கு கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம் மற்றும் கௌரவமாகும். தில்லியில் ஏராளமான எண்ணிக்கையில் வாழும் தமிழா்கள் தங்கள் மொழி, கலாசாரத்தோடு தொடா்ந்து இணைந்திருக்க தமிழ் அகாதெமி உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ் அகாதெமியின் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...