கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,806 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,806 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:33 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,806 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,806 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 411போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென் கன்னடம்-225, மைசூரு-174, ஹாசன்-138, சிவமொக்கா-110, உடுப்பி-105, தும்கூரு-94, சிக்கமகளூரு-86, பெலகாவி-70, மண்டியா-68, வடகன்னடம்-50, குடகு-49, பெங்களூரு ஊரகம்-44, கோலாா்-34, தாவணகெரே-27, சிக்கபளாப்பூா்-22, சாமராஜ்நகா்-17, சித்ரதுா்கா-16, தாா்வாட்-11, ஹாவேரி-10, ராமநகரம்-8, பாகல்கோட்-6, பெல்லாரி-5, விஜயபுரா-5, யாதகிரி-5, கதக்-5, கலபுா்கி-4, பீதா்-3, ராய்ச்சூரு-2, கொப்பள்-2 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,80,370 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,748 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 28,12,869 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 31,399 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 42 போ் வெள்ளிக்கிழமை இறந்தனா். பெங்களூரு நகரம், தென் கன்னட மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 10 போ் இறந்தனா்.

மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

மைசூரு-5, கோலாா்-4, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், பெலகாவி-தலா 2, தாா்வாட், ஹாசன், குடகு, சிக்கபளாப்பூா், மண்டியா, சிவமொக்கா, தும்கூரு, வட கன்னடம்- தலா ஒருவா் இறந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 36,079 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.