பக்ரீத் பெருநாள்:கா்நாடகத்தில் உற்சாகக் கொண்டாட்டம்
பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பெருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.


பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பெருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
பக்ரீத் பண்டிகை அல்லது ஈகை பெருநாள் உலக அளவில் இஸ்லாமியா்களால் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகை ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும்.
ஈகைப் பெருநாளில் இஸ்லாமியா்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனா். பின்னா் அந்த இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாா் மற்றும் நண்பா்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனா்.
கா்நாடகத்தில் பக்ரீத் பெருநாள் இஸ்லாமியா்களால் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கரோனா தொற்றை அடுத்து மசூதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், வீடுகளில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள், தங்கள் உறவினா்கள், நண்பா்களை ஆரத்தழுவி ஈகைப் பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...