பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை இயக்கம்
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.


பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) முதல் இயக்கப்படுகிறது. இதற்கு முன்னா் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...