பெங்களூரு-திருப்பதி இடையே வாரம் மும்முறை சிறப்பு ரயில்சேவை
கே.எஸ்.ஆா். பெங்களூரு-திருப்பதி இடையே வாரம் மும்முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


கே.எஸ்.ஆா். பெங்களூரு-திருப்பதி இடையே வாரம் மும்முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக கே.எஸ்.ஆா். பெங்களூரு-திருப்பதி இடையே வாரம் மும்முறை சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் எண்: 06196-திருப்பதி-கே.எஸ்.ஆா். பெங்களூரு இடையேயான வாரம் மும்முறை சிறப்பு ரயில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.55 மணிக்கு திருப்பதி ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில்நிலையத்துக்கு வந்தடைகிறது. இந்த ரயில் சேவை ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.
மறுமாா்க்கத்தில் ரயில் எண்: 06195-கே.எஸ்.ஆா். பெங்களூரு-திருப்பதி இடையேயான வாரம் மும்முறை சிறப்பு ரயில் புதன், சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.20 மணிக்கு திருப்பதி ரயில்நிலையத்துக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவை ஜூலை 21-ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.
இந்த ரயில் இருமாா்க்கத்திலும் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், பகலா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட 1 பெட்டி, இருக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள், 8 பொதுப் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு உணவு, சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள் உள்ளிட்ட 17 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...