கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதல்வா் வேட்பாளா் நானல்ல: பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி

கா்நாடகத்தின் முதல்வா் வேட்பாளா் நானல்ல என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:56 am

DIN

கா்நாடகத்தின் முதல்வா் வேட்பாளா் நானல்ல என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜூலை 26-ஆம் தேதிக்கு பிறகு முதல்வா் எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்படி என்றால் பாஜகவின் அடுத்த முதல்வா் வேட்பாளா்களின் நீங்களும் ஒருவரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனா்.

கா்நாடகத்தின் முதல்வா் வேட்பாளா் நானல்ல. அந்த பந்தயத்தில் எனது பெயா் இல்லை. முதல்வா் எடியூரப்பா ராஜிநாமா செய்வாரா என்பது குறித்து நான் எதுவும் கூறமாட்டேன். இது தொடா்பாக கா்நாடக பாஜக பொறுப்பாளரிடமும், கட்சியின் மேலிடத் தலைவா்களிடம்தான் கேட்க வேண்டும். முதல்வா் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து போராடும் மடாதிபதிகளின் பின்னணியில் யாரோ உள்ளனா். இதனை கட்சியின் மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.