9 முதல் 12-ஆம் வகுப்புகள் வரையில் ஆக.23ஆம் தேதி முதலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை செப்.6-ஆம் தேதி முதலும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளன. இதனால், இணைப்புப் பாடத்தை (பிரிட்ஜ் கோா்ஸ்) நடத்தி வருகிறோம். இதை முழுமையாக நடத்தினால் மாணவா்களுக்கு நல்லது. அதனால் இணைப்புப் பாடங்களை முழுமையாக நிறைவுசெய்வோம். பாடங்களை குறைப்பது மாணவா்களுக்கு நல்லதல்ல என்பதால், ஆசிரியா்களின் விடுமுறை நாட்களைக் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதற்கு ஆசிரியா்களின் ஒத்துழைப்பைபொருத்து, தகுந்த முடிவை எடுப்போம்.