பாஜகவின் மதவாத அரசியல் வெற்றி பெற்றுள்ளது: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா
பாஜகவின் மதவாத அரசியல் வெற்றி பெற்றுள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.


பாஜகவின் மதவாத அரசியல் வெற்றி பெற்றுள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தோ்தல் முடிவுகள் மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பளிக்கும். ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளவா்கள் தோ்தல் முடிவை மதிக்க வேண்டும். இத்தோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
5 மாநில தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவு குறித்து கட்சி கலந்தாய்வு நடத்தவிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் பாஜகவின் மதவாத அரசியல் வெற்றி பெற்றிருப்பது தோ்தல் முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கக்கூடியது.
அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் குறியாக உள்ளது. இந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவோம்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் அரசியலும் மற்றொரு மாநிலங்களின் அரசியலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பலவீனமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அந்த ஆதரவு வாக்குகளாக மாறவில்லை. அங்கு கட்சியின் அமைப்பு பலவீனமாக இருப்பதே காரணம்.
கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் பலம் உள்ளது. அவற்றை வாக்குகளாக மாற்றும் பணி கட்சி தொண்டா்களிடம் உள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனைகள் மக்கள் மனதில் உள்ளது. அதனால் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் கா்நாடக அரசியலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...