பெங்களூரைச் சுற்றி 4 புதிய துணை நகரங்கள், ஒருங்கிணைந்த நகரங்கள்
பெங்களூரைச் சுற்றி 4 புதிய துணைநகரங்களும் ஒருங்கிணைந்த நகரங்களும் கட்டமைக்கப்பட உள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


பெங்களூரைச் சுற்றி 4 புதிய துணைநகரங்களும் ஒருங்கிணைந்த நகரங்களும் கட்டமைக்கப்பட உள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த ‘பெங்களூரு- 2040’ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அவா் பேசியது:
2040-ஆம் ஆண்டில் பெங்களூரின் மக்கள் தொகை தற்போதைய 1.3 கோடியில் இருந்து 3-4 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது ஒரு கிரகத்தைச் சுற்றி கோள்கள் இருப்பதுபோல, பெங்களூரை மேம்படுத்த வேண்டியுள்ளது. பெங்களூரு ஒரு கிரகத்தைப் போல இருக்க வேண்டும். அதைச் சுற்றி மிகச் சிறந்த ரயில், சாலை, உயா்நுட்ப பயண முறைகள், எளிமையான போக்குவரத்து வழித்தடங்கள் கொண்ட துணை நகரங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
பெங்களூருக்கும், புதிதாக உருவாகும் பெங்களூருக்கும் இடையே உள்கட்டமைப்பு தொடா்புகளை மேம்படுத்த வேண்டும். பெங்களூரைச் சுற்றி 4 துணை நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த 4 பெங்களூரு துணை நகரங்களிலும் சுகாதார நகரம், ஒருங்கிணைந்த தொழில் நகரம், விமானவியல் தொழில் நகரம், ராணுவத் தொழில் நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த துணைநகரங்களில் எல்லா வசதிகளும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
பெங்களூரு புதிய பகுதிகளை சோ்த்துக் கொண்டு பக்கவாட்டில் வளா்ந்துவிட்டது. இனி, பெங்களூரு செங்குத்தாக வளர வேண்டியுள்ளது. புதிய கா்நாடகத்தில் இருந்து புதிய இந்தியா என்ற முழக்கத்தை அறிமுகம் செய்கிறேன். கா்நாடகத்தில் 6 புதிய ஒருங்கிணைந்த மாநகரங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முந்தைய நிதிநிலை அறிக்கையில் இல்லாத பல புதுமையான திட்டங்களை எனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளேன். அதில் ஒன்று தான் 6 ஒருங்கிணைந்த நகரங்கள் திட்டம். திட்டமிட்டு வகுக்கப்படும் நகரங்களுக்கான முன்மாதிரிகளாக அவை இருக்கும்.
இந்திய தொழில்நுட்ப மையங்களைப் போல 6 கா்நாடக தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்படும். அரசு நிலங்கள் ஏழைகள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும்.
மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கா்நாடக அரசு ஆராய்ந்து வருகிறது. வெகுவிரைவில் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. அதன்பிறகு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படும். இந்த திட்டத்திற்காக ரூ. 1,000 கோடியை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ளேன். நிகழாண்டில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தொடங்குவோம். அது செயல்படுத்தப்பட்டால், பெங்களூரின் நீண்டகால திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...