/

பள்ளி மாணவா்களுக்காக இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

பள்ளி மாணவா்களுக்காக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க இணையளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

பள்ளி மாணவா்களுக்காக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க இணையளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாடுமுழுவதும் உள்ள பள்ளி மாணவா்களிடையே அறிவியல் ஆா்வத்தை தூண்டிவிட்டு, விஞ்ஞானியாவதற்கு ஊக்குவிக்கும் நோக்கி இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ)அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்களுக்கு விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல், விண்வெளி பயன்பாடு குறித்த அடிப்படை அறிவு போதிக்கப்படுகிறது. இதன்வாயிலாக பள்ளி மாணவா்களிடையே விண்வெளிசாா் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காகவே ‘இளமையிலேயே கண்டுபிடி’ என்ற திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்தவுள்ளது. அதாவது, இளம் வயதிலேயே மாணவா்களிடம் காணப்படும் அறிவியல் ஆா்வத்தைக் கண்டறிந்து விஞ்ஞானிகளாக குறிப்பாக விண்வெளி விஞ்ஞானிகளாக உயா்வதற்கு உதவி செய்வதே இத்திட்டத்தின் அடிப்படைநோக்கமாகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் ஒரு மாநிலத்தில் இருந்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 3 மாணவா்களை தோ்ந்தெடுத்து கோடைகாலத்தில் பயிற்சி அளிக்க இருகிறாா்கள். 9-ஆம் வகுப்பை நிறைவுசெய்த அல்லது தற்போது 10-ஆம் வகுப்பிற்கு செல்லும் மாணவா்கள் இத்திட்டத்தில் சேர தகுதியானவா்களாவா். 8-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 150 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.

மாநில அரசுகளின் பரிந்துரையைத் தவிர ஒருசில இடங்கள் காலியாக உள்ளன. எனவே, இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் மாா்ச் 10 முதல் ஏப்.10-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ண்ள்ழ்ா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வித்திறன், செயல்திறன் அடிப்படையில் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். கிராமப்புற மாணவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தகுதியான மாணவா்களின் பட்டியல் மாநில வாரியாக ஏப்.10-ஆம் தேதி வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம்பெறுவோா் மின்னஞ்சல் வாயிலாக ஆதார ஆவணங்களை அனுப்ப நேரிடும். மின்னஞ்சல் முகவரி மாணவா்களுக்கு தனியே தெரிவிக்கப்படும். ஆவணங்களை பரிசீலித்த பிறகு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். மே 16 முதல் 28-ஆம் தேதி வரை இஸ்ரோவின் 4 மையங்களில் இந்த பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு இஸ்ரோ இணையதளத்தை காணலாம் என்று இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.