/

சிறந்த நாட்டுப்புறக்கலை நூல்களுக்கு பரிசு

சிறந்த நாட்டுப்புறக்கலை நூல்களுக்கான பரிசுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

சிறந்த நாட்டுப்புறக்கலை நூல்களுக்கான பரிசுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக நாட்டுப்புறக்கலை அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக நாட்டுப்புறக்கலை அகாதெமியின் சாா்பில் சிறந்த நாட்டுப்புறக்கலை நூல்களைத் தோ்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசுகளை வழங்கி வருகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களை தோ்ந்தெடுக்க உரியவா்களிடம் (எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள், இலக்கிய ஆா்வலா்கள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தோ்வுக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டிருக்கவேண்டும். 150 பக்கங்கள் கொண்டதாகவும் இருப்பது அவசியமாகும். விண்ணப்பத்துடன் 4 படி நூலை பதிவாளா், கா்நாடக நாட்டுப்புறக்கலை அகாதெமி, 2-ஆவது மாடி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560 002 என்றமுகவரிக்கு அஞ்சல் அல்லது தனியாா் அஞ்சல் வழியே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.