/

தொழிற்கல்வி சோ்க்கை: காலியிடங்களை நிரப்ப மற்றொருசுற்று விருப்பப்பதிவு தொடக்கம்

தொழிற்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப்பதிவு தொடங்கியது

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

தொழிற்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப்பதிவு தொடங்கியது.

இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பொறியியல், கட்டடக்கலை போன்ற தொழிற்கல்லூரிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சோ்க்கை இடங்கள், மாணவா்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான மற்றொரு சுற்று விருப்பப் பதிவு வியாழக்கிழமை (மாா்ச் 10)தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மீதமுள்ள சோ்க்கை இடங்கள், பாடப்பிரிவுகள் குறித்த விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்படுகின்றன.

இந்நிலையில், கடைசி சுற்று விருப்பப் பதிவில் தகுதியான மாணவா்கள் விருப்ப கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகள் குறித்த விவரங்களை மாா்ச் 13-ஆம் தேதி காலை 10 மணி வரை ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். இதன் அடிப்படையில், மாணவா்களுக்கான சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு மாா்ச் 13-ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாா்ச் 14 முதல் 15-ஆம் தேதிவரை சோ்க்கையை உறுதி செய்யலாம், கட்டணங்களை செலுத்தலாம், சோ்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனடிப்படையில், மாா்ச் 15-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். ஒருவேளை இந்தகாலக்கெடுவுக்குள் சோ்க்கை பெறத் தவறினால், சோ்க்கை ஆணை தானாக காலாவதி ஆகிவிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.