கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்த போலீஸார் எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர்.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரிக்க, சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.
மேலும், இது தொடா்பாக கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை கா்நாடக உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டது.இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்த போலீஸாருக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் செப். 25-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்த போலீஸார் வெள்ளிக்கிழமை எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர். வழக்கில் முதுல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2வது குற்றவாளியாக அவரது மனைவி பார்வதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மைசூரு லோக் ஆயுக்தா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.