சென்னை, ஆக. 20: சென்னை போயஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையின் தனிப் பிரிவில் அக் குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜலதோஷம், இருமல், 99 டிகிரி அளவு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்குடன் அந்தக் குழந்தையை அதன் பெற்றோர் புது ஆவடி சாலையில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் புதன்கிழமை சேர்த்தனர்.
பன்றிக் காய்ச்சல் (எச்1என்1 வைரஸ்) அறிகுறிகளைப் பார்த்து சந்தேகப்பட்டு, குழந்தையின் தொண்டைச் சளியை எடுத்து தனியார் பரிசோதனைக் கூடத்துக்கு டாக்டர்கள் அனுப்பினர்.
குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனை முடிவில் வியாழக்கிழமை உறுதியானது. இதையடுத்து குழந்தை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நியூ ஆவடி சாலையில் உள்ள அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு குழந்தைக்கு, பரிசோதனை முடிவின்படி "பன்றிக் காய்ச்சல் இல்லை' என்று தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


