மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

செஞ்சி பேரூராட்சிக்கு பொருந்தாதா?

 செஞ்சி, ஆக 26: "ஊரும் உள்ளமும் தூய்மையானால் உன் பேரும் பெருமையும் வாய்மையுறும்' என்ற வாசகத்தை தாங்கி நிற்கிறது செஞ்சி பஸ் நிலையம் ஆனால் இங்குள்ள கட்டணக் கழிப்பிடத்தில் ஆபாச சுவரொட்டிகள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:48 am

ஜெ.பாபு

 செஞ்சி, ஆக 26: "ஊரும் உள்ளமும் தூய்மையானால் உன் பேரும் பெருமையும் வாய்மையுறும்' என்ற வாசகத்தை தாங்கி நிற்கிறது செஞ்சி பஸ் நிலையம் ஆனால் இங்குள்ள கட்டணக் கழிப்பிடத்தில் ஆபாச சுவரொட்டிகளும், சினிமா சுவரொட்டிகளும், தனியார் விளம்பரங்களும் சுவற்றை நிரப்பி பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. செஞ்சி பேரூராட்சி சார்பில் ரூ.4.4 லட்சம் செலவில் கழிப்பிடக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. "செஞ்சி பேரூராட்சி கட்டணக் கழிப்பிடம்' என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் கட்டண விவரம் இல்லை. சிறுநீர் கழிக்க ரூ.2-ம், மலம் கழிக்க ரூ,3-ம் கட்டணமாக பெறுகின்றனர். அரசு நிர்ணயித்துள்ள கழிப்பிடக் கட்டண விவரத்தை எழுதவில்லை.

 இந்த கட்டணக் கழிப்பிடத்தில் போன்று இதற்கு எதிரே தமிழக அரசின் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.4.4 லட்சம் செலவில் புதிய கழிப்பிடக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் குளிக்கும் வசதி இருந்தும் பயன்படுத்தவில்லை. மேலும் இதில் பெண்களுக்கான கழிப்பிட கட்டடத்தை இதுவரை பேரூராட்சி திறக்கவில்லை. இரண்டு கழிப்பிடக் கட்டடத்தில் ஒன்றில் மட்டுமே பெண்கள் கழிப்பிட வசதியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இரண்டு கட்டணக் கழிப்பிட சுவற்றிலும் ஆபாச சுவரொட்டிகள் நிறைந்து காணப்படுகிறது. சிறுநீர் வழிக்க வரும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆபாச சுவரொட்டிகளை பார்க்க நேரிடுகிறது. இதன் மூலம் மாணவிகள் மனநலம் உளவியல் ரீதியாக பாதிக்கபடுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை மூலம் அகற்றி கழிப்பிட சுவற்றில் எழுதியுள்ள "ஊருக்கு உபதேசம் செய்யும் வாசகம்' பேரூராட்சிக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்க வேண்டும்.

 சுவற்றை தூய்மையாக்கிடவும், மேலும் சுவரொட்டிகளை ஒட்டாமல் இருக்கவும், கட்டணக் கழிப்பிட பட்டியலை எழுதி வைக்கும்படியும் செஞ்சி நகர பொது மக்கள் கோரிக்கை பேரூராட்சிக்கு விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.