லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலைப் பாதுகாப்பு விழா

திருவள்ளூர், ஜன.  8: திருவள்ளூரை அடுத்த ஸ்ரீவெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சாலைபாதுகாப்பு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை கல்லூரியின் நிறுவனத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

தினமணி

திருவள்ளூர், ஜன.  8: திருவள்ளூரை அடுத்த ஸ்ரீவெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சாலைபாதுகாப்பு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை கல்லூரியின் நிறுவனத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கந்தசாமி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இதில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயபாஸ்கர் உரையாற்றும் போது, ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 1-ம் தேதி துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் வெங்கடேஸ்வரா கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தியது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம், நகரத்தின் முக்கிய பகுதியில் விழிப்புணர்வு பேனர்கள் வைப்பது, இலவச கண் சிகிச்சை முகாம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.  

சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பெருமளவு விபத்துக்கள் குறைவதுடன், வாகன ஓட்டிகள் சாலை விதிகளையும் மதிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்து விளக்க படங்கள் கொண்ட கையேடு வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடேசன், உடல்கல்வித் துறை இயக்குநர் செந்தில்பிரபு, பேராசிரியர் ராம்குமார் ஆகிய ஏராளமானோர் பங்கேற்றனர். கல்லூரியின் இயக்குநர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.