உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

நெய்வேலி தொ.மு.ச. தேர்தல்: வெற்றி பெறும் "தோழர்' யார்?

நெய்வேலி, அக். 8: இம்மாதம் 14-ம் தேதி நடக்கவுள்ள நெய்வேலி தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வெற்றி பெறப்போவது யார் என்பது தொழிலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

நெய்வேலி, அக். 8: இம்மாதம் 14-ம் தேதி நடக்கவுள்ள நெய்வேலி தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வெற்றி பெறப்போவது யார் என்பது தொழிலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ÷7,500 தொழிலாளர்களை உறுப்பினராகக் கொண்ட தொமுச, என்.எல்.சி.யின் அங்கீகரிக்கப்பட்டச் சங்கமாக கடந்த 40 ஆண்டுகளாக திகழ்கிறது. இச்சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவதால் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

 ÷இந்நிலையில் இத்தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடக் கூடியவர்கள் அணி அமைக்கும்போது, வன்னியர், தாழ்த்தப்பட்டோர் அல்லாத இதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு வன்னியர், ஒரு தாழ்த்தப்பட்டோர் என பிரிவு பார்த்துத் அணி அமைத்துள்ளனர். இது கடந்த 4 முறையாக தொடர்ந்து நடைபெறுகிறது.

 ÷இதற்குக் காரணம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொழிற்சங்கங்களுக்கிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பின்போது, தொழிலாளர்கள் ஜாதிவாரியாக வாக்களித்தன் விளைவு, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

 ÷தொமுசவில் இதர சமுதாயத்தைச் சேர்ந்த முதலியார், நாயுடு, செட்டியார், யாதவர், பிராமணர் உள்ளிட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

 ÷இந்நிலையில் இதர சமுதாயத்தினர் அதிகமுள்ள தொமுசவில், தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடக் கூடியவர்களில் இதர சமுதாயத்தினர் அதிகம். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்னியர் உள்ளனர்.

 ÷இதர சமுதாயத்தினர் அதிகளவில் போட்டியிடுவதால், வாக்குகள் பிரியும். எனவே, மற்ற இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என எண்ணி வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

 ÷தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடக் கூடியவர்கள் ஒன்றை மறந்துவிட்டு வாக்குச் சேகரிப்பதை தொழிலாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

 ÷இது குறித்து என்.எல்.சி. ஓய்வுபெற்ற தொழிலாளியும், தொழிற்சங்கத் தலைவருமான குப்புசாமி கூறுகையில், "ஒரு நிர்வாகம் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல நல்லது செய்திருந்தாலும், அதில் ஏதேனும் குறை இருக்கிறதா? என்று பார்த்து, நிர்வாகத்தை ஏதேனும் ஒரு வகையில் குறை கூறவேண்டிய கட்டாயம் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு உண்டு.

 ÷எக்காலத்திலும் நிர்வாகத்தை பாராட்டி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர்.

 ÷ஆனால் நெய்வேலியில் நிலைமையே வேறு, தொழிற்சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொள்கின்றனரே தவிர நிர்வாகத்தைக் கண்டித்து ஒருவரும் வாய்திறக்க முன் வரவில்லை.

 ÷என்.எல்.சி. அலுவலகப் பணிநேரம் மாற்றம், சுரங்கப் பகுதியில் நிலவும் தொழிலாளர் பிரச்னை, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் நிர்வாகம் காட்டும் மெத்தனம், வாரிசுவேலை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையால் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னைக் குறித்தும் எவரும் வாய்திறக்க முன்வராதது போன்ற குறைபாடுகள் தொழிலாளர்கள் மத்தியில் நிலவினாலும் அதை முன்வைத்து யாரும் வாக்கு கேட்கவில்லையே' என்ற ஆதங்கம் தனக்கிருப்பதாக குப்புசாமி தெரிவித்தார்.

 ÷தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் போது, சக தொழிலாளர்கள் ஜாதி, மதம், மொழி இவற்றையெல்லாம் கடந்து தோழர் என்ற வார்த்தையின் மூலம் மிகுந்த நட்புறவு கொண்டிருப்பர். அந்த நட்பு ஒரு தொழிலாளியின் இளமை காலம் முதல் முதுமைப் பருவம் வரை மிக நெருக்கமாக இருக்கும்.

 ÷அத்தகையை தோழமையில் ஜாதி எனும் தீயை வளர்த்து குளிர்காய முற்படுவது எந்தவகையில் நியாயம்?

 ÷தற்போது தொழிலாளர்களுக்கு தேவை திறமையுள்ள, நிர்வாகத்திடம் வாதிட்டு கோரிக்கைகளை முடிக்கும் பக்குவமுள்ள சிறந்த தோழர்களே. தொழிலாளர்களுக்குத் தேவை சாதிக்கக் கூடிய தலைவர்கள். ஜாதித் தலைவர்கள் அல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.