காரைக்கால், அக். 8: காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்க புதுவை அரசு முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கட்சி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி பிரதேச செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தியாகி பி. தாண்டவசாமி கட்சிக் கொடியேற்றினார். புதுச்சேரி பிரதேச செயற்குழு உறுப்பினர் வே.கு. நிலவழகன் விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
தீர்மானங்கள்: உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று விரைவில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும். காரைக்கால் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிலக்கரி இறக்கப்படுவதை நிறுத்த வேண்டும். சென்னை, தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி இறக்க நீதிமன்றம் தடை விதித்தது போல, காரைக்கால் துறைமுகத்திலும் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்களை நியமித்து, மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். காரைக்காலில் போதுமான அளவு சிற்றேரிகள் அமைத்து காவிரி நீர், மழை நீரை சேமிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காரைக்கால் வட்ட செயலர் அ. வின்சென்ட், மாவட்டக் குழு உறுப்பினர் என்.எம். கலியபெருமாள், வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். ராஜசேகரன், எஸ். தமீம், அ. பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுங்காடுகள் அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 75.21 அடி
அரியலூா் மாவட்டத்தில் நாளைய மின்தடை
நாகுடி, கட்டுமாவடி, விராலிமலை பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


