காரைக்கால், அக். 8: காரைக்காலில் ஏ.டி.எம். சேவையில் அரசுடைமை வங்கிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ÷நாடு முழுவதும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் நகரப் பகுதி மட்டுமின்றி பிற பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் ஏ.டி.எம். வசதியை ஏற்படுத்தியுள்ளன.
வங்கிக் கிளைக்குச் சென்று காசாளர் பிரிவில் நின்று நேரத்தை வீணாக்காமல், வங்கியின் ஏ.டி.எம். வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
வேறு பணிக்காக வங்கிக் கிளைக்குச் செல்லும்போது, அவசரத் தேவைக்காக காசோலை மூலமோ அல்லது பணம் பெறும் சீட்டின் மூலமோ கோரும்போது, சில வங்கிகளில் ஏ.டி.எம். மூலம் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்களாம்.
மேலும், சில பிரதான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணம் தருவதற்கு புதிய முறையை அமல்படுத்தி உள்ளதாம். காலை 10 மணிக்கு கிளை திறந்தவுடன் சென்று அங்குள்ள பெட்டியில் டோக்கன் எடுத்துவிட வேண்டும். காசாளர் அழைக்கும் வரை அங்கேயே காத்திருக்க வேண்டும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் வங்கியில் காத்திருக்கும் வகையில் விதிகளை ஏற்படுத்தியுள்ளன சில அரசுடைமை வங்கிகள்.
பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். சேவையை நாடுகின்றனர். குறிப்பாக, தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். சேவையை வாடிக்கையாளரிடம் எந்தக் குறையும் ஏற்படுத்தாத வகையில் உள்ள நிலையில், அரசுடைமை வங்கிகளில் பல ஏ.டி.எம்.களில் இயந்திரக் கோளாறைச் சரி செய்யாமல் வங்கி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாவதாகக் கூறப்படுகிறது.
பல நேரங்களில் இந்த வங்கிகளின் ஏ.டி.எம்.கள் கதவு பூட்டப்பட்டும், சேவை தாற்காலிக நிறுத்தம் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையைத் தொங்கவிட்டும் உள்ளதாகவும், குறிப்பாக ஏ.டி.எம். இயந்திரத்தில் தொடுதிரை வசதியுள்ளவை தேய்ந்து வாடிக்கையாளர் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருக்கிறதாம். இதுபோன்ற பிரச்னைகள் காரைக்கால் நகரத்தில் உள்ள அரசுடைமை வங்கிகளின் ஏ.டி.எம்.கள் பலவற்றில் நிலவுவதாகப் புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தந்த கிளையின் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.டி.எம். சேவையில் வாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்தும் வங்கி அதிகாரிகள் மீது தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அரசு வங்கிகள் அலட்சியமாக இருப்பது தனியார் வங்கிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தேர்தல் வழக்கு: வாக்காளர் பதிலளிக்க உத்தரவு!

மைக்கேல் திரைப்படத்தின் ஓடிடி தேதி! இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

ஓடிடியில் காணக் கிடைக்கும் மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


