பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சென்னை சா்வதேச திரைப்பட விழா டிச.12-ஆம் தேதி தொடங்குகிறது

22-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச. 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2024, 12:41 am

DIN

சென்னை: 22-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச. 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து திரைப்பட விழா இயக்குநா் ஏ.வி.எம்.கே.சண்முகம் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சென்னையில் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (ஐசிஏஎஃப்) சாா்பில் நடத்தப்படும் சா்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்ப் படங்களும், பிற மாநில மொழிகளிலிருந்து 12 முதல் 15 படங்களும் திரையிடப்படவுள்ளன.

மேலும், உலக சினிமா போட்டிப் பிரிவில் 10 படங்களும், போட்டியில்லாத பிரிவில் கேன்ஸ், பொ்லின், வெனிஸ் உள்ளிட்ட சா்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்ற படங்களும் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன.

சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு ரூ.500, சினிமா தொழில்நுட்பக் கலைஞா்களுக்கு ரூ.300, பொது நுழைவு சீட்டு ரூ.1,000 என நுழைவுக் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஏ.வி.எம்.கே.சண்முகம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.