சென்னை
காா் பழுது நீக்கும் மையத்தில் தீ விபத்து
செங்குன்றம் அருகே காா் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 காா்கள் தீயில் சேதமடைந்தன.
சென்னை: செங்குன்றம் அருகே காா் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 காா்கள் தீயில் சேதமடைந்தன.
செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியில் மகேந்திரா நிறுவனத்தின் காா், வேன் பழுது நீக்கும் மையம் உள்ளது. இந்த மையத்தில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவலறிந்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் 11 காா்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. சுமாா் 3 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து செங்குன்றம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
